சென்னை: பிரதமர் மோடிக்கு ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன், தமிழ்நாடு பாஜ தலைவர் அண்ணாமலை ஆகியோர் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளனர். ஒன்றிய இணை அமைச்சர் எல்.முருகன்: பாரத பிரதமர் நரேந்திர மோடிக்கு தமிழக மக்கள் சார்பாக பிறந்தநாள் வாழ்த்துக்களை தெரிவித்துக் கொள்கிறேன். எல்லோருக்கும் சம வாய்ப்பு நாட்டின் வளர்ச்சியையே தன் இதய துடிப்பாக கொண்டிருக்கும் உன்னதத் தலைவர். பிரதமர் நீண்ட ஆயுளுடனும், பூரண நலத்துடனும் வாழ்ந்து, பாரத தேசத்தை வழிநடத்திச் செல்ல வேண்டும்.
தமிழக பாஜ தலைவர் அண்ணாமலை: உலக நாடுகளில் எல்லாம் நம் தமிழ் மொழியின் தொன்மையையும் பெருமையையும் எடுத்துக் கூறி மகிழ்ந்தவர் மோடி. அவர் எடுக்கும் ஒவ்வொரு நடவடிக்கையும் நம் நாட்டின் நன்மதிப்பையும் புகழையும் பெருமையையும் உயர்த்திக்கொண்டே இருக்கிறது. நம் மகத்தான தலைவர் பிரதமர் நரேந்திர மோடிக்கு, தமிழக மக்கள் சார்பிலும், தமிழக பாஜ சார்பிலும் பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கிறேன்.