Sunday, July 21, 2024
Home » குவைத் செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறுப்பு: முதல்வர் பினராய் விஜயன் கண்டனம்

குவைத் செல்ல கேரள அமைச்சருக்கு அனுமதி மறுப்பு: முதல்வர் பினராய் விஜயன் கண்டனம்

by Karthik Yash

திருவனந்தபுரம்: குவைத்தில் நடந்த தீ விபத்தில் கேரளாவை சேர்ந்த 24 பேர் பலியாகி உள்ளனர். இந்த சம்பவம் குறித்து அறிந்தவுடன் திருவனந்தபுரத்தில் முதல்வர் பினராயி விஜயன் தலைமையில் அமைச்சரவையின் அவசர ஆலோசனைக் கூட்டம் நடந்தது. இதில் குவைத்துக்கு சுகாதாரத் துறை அமைச்சர் வீணா ஜார்ஜ், ஒரு ஐஏஎஸ் அதிகாரியை அனுப்ப முடிவு செய்யப்பட்டது. இதுகுறித்து உடனடியாக ஒன்றிய அரசின் அனுமதி கோரப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 9.40 மணியளவில் கொச்சியிலிருந்து குவைத்துக்கு புறப்படும் விமானத்தில் இவர்கள் செல்ல முடிவு செய்யப்பட்டிருந்தது. இதற்காக அமைச்சர் வீணா ஜார்ஜும், ஐஏஎஸ் அதிகாரியான ஜீவன் பாபுவும் கொச்சி விமான நிலையத்திற்கு புறப்பட்டு சென்றனர். ஆனால் 9.40க்கு புறப்பட வேண்டிய விமானத்தில் செல்வதற்காக 9.30 மணி வரை காத்திருந்தும் அவர்களுக்கு ஒன்றிய அரசு குவைத் செல்ல அனுமதி வழங்கவில்லை. அதைத்தொடர்ந்து 2 பேரும் விமான நிலையத்திலிருந்து திரும்பினர்.

இது குறித்து அமைச்சர் வீணா ஜார்ஜ் கூறியது: குவைத் செல்ல ஒன்றிய அரசு அனுமதி வழங்காதது துரதிர்ஷ்ட வசமானதாகும். அனுமதி மறுத்ததற்கு என்ன காரணம் என்று ஒன்றிய அரசு கூறவில்லை. இது ஒரு தவறான நடவடிக்கையாகும். இவ்வாறு அவர் கூறினார். கேரள முதல்வர் பினராய் விஜயன் கூறியது, அமைச்சர் குவைத் செல்ல ஒன்றிய அரசு அனுமதி மறுத்ததுசரியான நடவடிக்கை அல்ல. இந்த நேரத்தில் இது குறித்து விவாதிக்க வேண்டாம் என கருதுகிறேன். இவ்வாறு அவர் கூறினார். கேரள எதிர் கட்சி தலைவர் சதீசனும் ஒன்றிய அரசின் இந்த நடவடிக்கைக்கு கடும் கண்டனம் தெரிவித்தார்.

You may also like

Leave a Comment

seven − two =

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi