சென்னை: குறுவை மற்றும் சம்பா சாகுபடியால் பாதித்த விவசாயிகளுக்கு ஏக்கருக்கு ரூ.30,000 வழங்க வேண்டும் என ஓ.பன்னீர்செல்வம் வலியுறுத்தியுள்ளார். விவசாயிகளின் நலன் கருதி இன்றைய நிலவரப்படி பாதித்த நெற்பயிர்களை கணக்கிட வேண்டும். குறுவை சாகுபடிக்கு பயிர் காப்பீடுத் திட்டத்தை அரசு நடைமுறைப்படுத்த வேண்டும் எனவும் ஓபிஎஸ் கேட்டுக் கொண்டுள்ளார்.