சென்னை: குறுவை நெற்பயிர்களுக்கு ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் காப்பீடு பெற்றுத்தர அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பாமக தலைவர் அன்புமணி வலியுறுத்தியுள்ளார். ஏக்கருக்கு ரூ.30 ஆயிரம் இழப்பீடு வழங்கப்பட்டால்தான் உழவர்கள் பாதிப்பின்றி தப்பிக்க முடியும். குறுவை பயிர்களின் காப்பீட்டுத் தேதி ஏற்கனவே முடிந்த நிலையில் இம்மாத இறுதிவரை நீட்டிக்க வேண்டும் என்று அவர் கூறினார்.