செங்கல்பட்டு: செங்கல்பட்டு மாவட்டம், மறைமலைநகர் அருகே மருந்தீரர் தெருவில் ஒரு வீட்டில் வடமாநில வாலிபர், மாவா என்கிற குட்கா பொருட்களை தயார் செய்து விற்பனை செய்யப்படுவதாக மறைமலைநகர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது.
அதன்பேரில், சம்பவ இடத்திற்கு சென்ற உதவி ஆய்வாளர் சுரேஷ்குமார், அங்கு மாவா தயாரித்து கொண்டிருந்த பவூத்மியான் என்பவரின் மகன் பெரோஸ் (41) என்பவரை கைது செய்தனர். பின்னர், மாவா என்கிற குட்கா பொருட்களை தயாரிப்பதற்கு வைத்திருந்த 5 கிலோ பாக்கு சீவல், 1 கிலோ ஜர்தா, கிரைண்டர் மற்றும் பேக்கிங் கவர் ஆகியவற்றை பறிமுதல் செய்தனர்.
இதனையடுதது, கைது செய்யப்பட்ட பெரோல் மீது வழக்குப்பதிவு செய்த போலீசார், அவனை செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.