தேவையான பொருட்கள்
பச்சரிசி – அரை கப்
பாசிப் பயறு – 1 கப்
கொண்டைக்கடலை – 1 கப்
கடலை பருப்பு – 1 கப்
கொள்ளு – 1 கப்
தட்டைப்பயறு – 1 கப்
கருப்பட்டி – 1.5 கிலோ.
ஏலக்காய் – 10.
செய்முறை
அடிகனமான இரும்புச்சட்டியில் கடலைப் பருப்பு, கொள்ளு, பாசிப் பயறு, கொண்டைக்கடலை, தட்டைப் பயறு, பச்சரிசி ஆகிய அனைத்தையும் தனித்தனியாக போட்டு இளம் சூட்டில் வறுத்து எடுத்துக் கொள்ளவும். இதனை மிக்ஸியில் போட்டு கரகரப்பாக திரித்துக் கொள்ளவும். இப்போது ஒரு அடி கனமான பாத்திரத்தை அடுப்பில் வைத்து அதில் அரை லிட்டர் அளவுக்கு தண்ணீர் ஊற்றி, அதில் கருப்பட்டியை தட்டிப் போட்டு கொதிக்க விடவும். கருப்பட்டி நன்றாக கரைந்து கொதித்து வரும்போது, கருப்பட்டி கரைசலை மற்றொரு பாத்திரத்திற்கு மாற்றி, அடியில் தங்கியுள்ள கற்களை நீக்கிக் கொள்ளவும். இப்போது மீண்டும் கருப்பட்டி பாகை அடுப்பில் வைத்துக் கொதிக்க விட்டு, அதில் திரித்து வைத்துள்ள கலவையை சேர்த்து கிளறி வேக விடவும். பின்னர் அனைத்தும் ஒன்று சேர்ந்து நன்றாக வெந்து வரும் தருவாயில் ஏலக்காயை பொடித்து தூவி இறக்கி விடவும். இதில் கூடுதலாக பசும் பால், வறுத்த தேங்காய் பற்கள் அல்லது துருவிய தேங்காய் பூவை சேர்த்தால் சுவை இன்னும் கூடுதலாக இருக்கும்.