தஞ்சை: கும்பகோணம் அருகே சானிடைசரில் போதை மாத்திரைகளை கலந்து குடித்த 2 பேர் உயிரிழந்தனர். கூடுதலாக போதை வேண்டும் என்பதற்காக சானிடைசரில் போதை மாத்திரைகளை கலந்து குடித்ததால் விபரீதம் ஏற்பட்டுள்ளது. சடலங்களைக் கைப்பற்றி கும்பகோணம் காவல்துறையினர் விசாரணை நடத்தி வருகின்றனர். போதை அதிகமாகி சௌந்தரராஜன் (43), பாலகுரு (48) ஆகியோர் காவிரி படித்துறையிலேயே உயிரிழந்தனர்.