கும்பகோணம்: கும்பகோணத்தில் அதிக போதைக்காக சானிடைசர் கலந்து குடித்த கட்டிட தொழிலாளர்கள் 2 பேர் உயிரிழந்தனர். அதிக போதைக்காக மாத்திரையுடன் சானிடைசர் கலந்து குடித்த சவுந்தர்ராஜன் (43), பாலகுரு (48) ஆகியோர் உயிரிழந்தனர். சக்கரப்படித்துறை காவிரி மேல்கரையில் கிடந்த 2 பேரின் சடலத்தை மீட்டு உடற்கூறு ஆய்வுக்காக போலீசார் அனுப்பி வைத்தனர்.