கும்பகோணம்: கும்பகோணம் அருகே, இறந்த நிலையில் நரியின் உடல் கண்டெடுக்கப்பட்ட நிலையில், சிறுத்தை தாக்கி உயிரிழந்ததா என விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். திருமலைராஜபுரத்தில் இருந்து மல்லபுரம் செல்லும் சாலையில் நரியின் உடல் கண்டெடுத்துள்ளனர்.
மயிலாடுதுறையில் வனத்துறைக்கு போக்கு காட்டி வந்த சிறுத்தை தஞ்சை மாவட்ட எல்லையில் தென்பட்டதாக கூறப்பட்ட நிலையில் நரியின் உடல் கண்டெடுத்தனர். அருகே உள்ள கால் தடத்தை வைத்து வனத்துறை விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். கடைசியாக சிறுத்தை தென்பட்ட கஞ்சிவாய் பகுதியில் இருந்து கும்பகோணம் 20 கி.மீ. தொலைவில் உள்ளது.
மயிலாடுதுறை மாவட்டம் கூறைநாடு, சித்தர்காடு பகுதிகளில் சிறுத்தை நடமாட்டம் இருப்பதாகக் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஒரு காணொளி காட்சி வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. பின்னர் அதனை வனத்துறையினர், மாவட்ட நிர்வாகமும் உறுதிப்படுத்தியது. சிறுத்தையைப் பிடிக்க வனத்துறையினர் தீவிர முயற்சிகள் தொடர்ந்து மேற்கொண்டு வருகின்றனர்.
இந்நிலையில், தற்போது இந்த சிறுத்தை தஞ்சை மாவட்டம் கும்பகோணம், பழவாத்தான் கட்டளை ஊராட்சி, முத்தய்யா பிள்ளை மண்டபம் பகுதியில் பதுங்கியிருப்பதாக சமூக வலைத்தளங்களில் தவறான செய்தி பரவியதால் கும்பகோணம் பகுதி மக்களிடையே வெளி இடங்களில் செல்லவும், நடமாடவும் அச்சம் கொண்டுள்ளனர்.
இந்நிலையில் கும்பகோணத்தில் இறந்த நிலையில் நரியின் உடல் கண்டெடுக்கபட்டுள்ளது. இந்த நரி சிறுத்தை தாக்கி உயிரிழந்ததா அல்லது வேறு எதாவது தாக்கி உயிரிழந்தா என்று வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.