கும்பகோணம்: கும்பகோணம் மாநகராட்சி ஒப்பந்த தொழிலாளர் குடும்பத்துக்கு ரூ.30 லட்சம் நிவாரணம் வழங்குவதாக உறுதி அளிக்கப்பட்டுள்ளது. கழிவுநீர் தொட்டியில் தவறி விழுந்து உயிரிழந்த ஒப்பந்த தொழிலாளர் ராஜேந்திரன் குடும்பத்துக்கு நிவாரணம் வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. மாநகராட்சி ஆணையர், துணை மேயர் ஆகியோருடன் சி.ஐ.டி.யூ. தொழிற்சங்கத்தினர் நடத்திய பேச்சுவார்த்தையில் ஒப்பந்த தொழிலாளர் ராஜேந்திரனின் வாரிசு ஒருவருக்கு மாநகராட்சியில் பணி வழங்கவும் உடன்பாடு ஏற்பட்டுள்ளது.