Wednesday, July 9, 2025
Home ஆன்மிகம் கும்பகோணம் மங்களாம்பிகை உடனுறை ஆதி கும்பேஸ்வரர்

கும்பகோணம் மங்களாம்பிகை உடனுறை ஆதி கும்பேஸ்வரர்

by Porselvi

கர்மா என்பதற்கும் புண்ணியம் என்பதற்கும் பாக்கியம் என்பதற்கும் வேறுபாடுகள் உண்டு இதனை நவகிரகங்களின் ஆளுமைகளுக்கு உட்படுத்திக் கொள்கின்றன. இதனை இறையோடு உட்படுத்தி கிரகங்களின் தோஷங்களை குறைத்துக் கொள்வதற்கான சூட்சும வழிகளில் ஒன்றுதான் ஜோதிடம். இதனைதான் தெய்வங்கள் கிரகங்கள் வடிவிலும் கிரகங்கள் தெய்வங்கள் வடிவிலும் அருள்பாலிக்கும் தன்மை உணர்வதும் அறிவதும் நமக்கான நல்வழியை நாம் கண்டுணர்வதாகும்.பிரம்மனின் வேண்டுகோளுக்கு இணங்கி இறைவன் கொடுத்த அமுதகலசத்தை தாங்கியதால்தான் இவ்விடம் கும்பகோணம் என்று அழைக்கப்படுகிறது. கும்பத்திலிருந்து அமுதத்திலிருந்தும் இறைவன் வெளிப்படாததால்தான் கும்பேஸ்வரர் என்று அழைக்கப்படுகிறார். பிரளய காலத்தில் மிதந்து வந்த அமுது கும்பத்தின் முக்கின் வழியே அமுதம் பரவியதால்தான் குடமூக்கு என்ற இக்கோயில் உண்டானது. அமுத குடத்தை அலங்கரித்த மாவிலை, தர்ப்பை, உறி, வில்வம், தேங்காய், பூணூல் போன்றவை காற்றினால் சிதைக்கப்பட்டு அவை விழுந்த இடங்களில் எல்லாம் தனித்தனி லிங்கங்களாய் காட்சி கொடுத்தார் இறைவன். இந்த திருத்தலத்தில் மங்களநாயகி மந்திர பீட நலத்தால் வளர்மங்கை என அழைக்கப்படுகிறார். இது அதீத மந்திர சக்திகளை உள்ளடக்கியதால் சக்தி பீடமாகத் திகழ்கிறது. அதீத மந்திர சக்திக்கு உட்பட்டுள்ளதால் சக்திப் பீடங்களுக்கெல்லாம் தலையாய சக்திப் பீடமாக திகழ்கிறது. திருஞான சம்பந்தர், திருநாவுக்கரசர், அப்பர், காளமேகப் புலவர் ஆகியோரால் பாடப் பெற்ற திருத்தலமாகும்.

கும்பகோணத்தில் மங்களாம்பிகை உடனுறை ஆதி கும்பேஸ்வரர் தெய்வங்களுக்குச் சூரியன், சந்திரன், செவ்வாய், குரு, சனி ஆகிய கிரகங்கள் நாமகரணம் செய்துள்ளன. சித்திரை மாதம் வரும் பௌர்ணமி அன்று ராகு – கேது தோஷம் உள்ளவர்கள் இங்குள்ள வாசுகியை வழிபட்டு செந்தாமரை மலரைக் கொடுத்துச் சென்றால் தோஷங்கள் குறையும். விசாக நட்சத்திர நாளில் சுவாமிக்கும் அம்பாளுக்கும் செண்பகப் பூவையும் தர்ப்பைப் பூவையும் மாலையாக தொடுத்து செவ்வாழைப் பழத்தை நெய்வேத்தியம் செய்து அங்கு வரும் பக்தர்களுக்குக் கொடுத்து வந்தால் செல்வச் செழிப்பு அதிகமாகும். இந்த பரிகாரத்தை மாலை நேரத்தில் செய்வது சிறப்பாகும்.உத்திரட்டாதி நட்சத்திர நாளில் சுவாமிக்கு அபிஷேகம் செய்யும் தீர்த்தத்தை வாங்கி நீண்ட நாள் நோய்வாய்பட்டவர்கள் அருந்தினாலும் அந்த தீர்த்தத்தை குளிக்கும் நீரில் கலந்து நீராடினாலும் நோய் குணமாகும்.பௌர்ணமி தினத்தில் பால் அபிஷேகம் செய்து அந்த பாலையும் அபிஷேக தீர்த்தத்தையும் கால்நடைகளுக்குத் தெளித்தால் கால்நடைகள் பாதுகாப்பாகவும் ஆரோக்கியமாகவும் இருக்கும்.

சதயம் நட்சத்திர நாளில் வெற்றிலை அபிஷேகம் செய்து அந்த தீர்த்தத்தை அருந்தினாலும் நீராடினாலும் தோல் தொடர்பான பிரச்னைகள், வெரிகோஸ் வெயின் என்று சொல்லக்கூடிய நரம்பு பிரச்னைகள், முடக்குவாதம் போன்ற நோய்கள் குணமாகும். பூரம் நட்சத்திரம் அன்றோ அல்லது பௌர்ணமி நாளிலோ அம்மனுக்கு வஸ்திரமும் அணிகலன்களும் கொடுத்து அம்பாளுக்குப் பிடித்த நெய்வேத்தியம் படைத்து அதனை அங்கு வரும் திருமணம் ஆகாத பெண்களுக்குக் கொடுத்தால் அம்பாளே பெற்றுக்கொள்வதாக ஐதீகம். இது பெண் தொடர்பான தோஷங்கள் விலகி விரைவாக திருமணம் கைகூடும். மிருகசீரிஷம் நட்சத்திர நாளில் கோயிலுக்கு நல்லெண்ணெய், தேங்காய் எண்ணெய், இலுப்பை எண்ணெய் கொடுத்து கறுப்பு நிற பசுவிற்கு உணவளித்தால் சொத்துப் பிரச்னை மற்றும் வழக்குகள் முடிவுக்கு வரும். மகாமகம் சிறப்பாக கொண்டாடக்கூடிய பிரசித்தி பெற்ற திருத்தலமாகும்.

 

You may also like

Leave a Comment

Dinakaran is a Tamil daily newspaper distributed in India. As of March 2010, Dinakaran is the largest Tamil daily newspaper in terms of net paid circulation, which was 1,235,220. In terms of total readership, which was 11.05 Lakhs as of May 2017, it is the second largest. Dinakaran is published from 12 centers in India namely Delhi, Mumbai, Chennai, Bengaluru, Madurai, Coimbatore, Trichy, Salem, Nagercoil, Vellore, Nellai and Pondicherry.

Address

@2024-2025 – Designed and Developed by Sortd.Mobi