தேனி: தேனி மாவட்டம் பெரியகுளம் அருகே கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது. அருவியில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு காரணமாக பாதுகாப்பு கருதி சுற்றுலா பயணிகள் குளிக்க தடை விதித்துள்ளனர். தேனியில் நீர்பிடிப்பு பகுதிகளில் பெய்த கன மழையால் மஞ்சளார் அணையின் நீர்வரத்து 50 அடியாக உயர்ந்துள்ளது. நீர்வரத்து அதிகரித்துள்ளதால் மஞ்சளார் அணையில் இருந்து 50 கனஅடியாக நீர் வெளியேற்றப்படுகிறது. தற்போது மஞ்சளார் அணையின் நீர் இருப்பு 435.32 மி. கனஅடியாக உள்ளது