தேனி: கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு காரணமாக சுற்றுலாப் பயணிகள் குளிக்க 6வது நாளாக தடை விதிக்கப்பட்டுள்ளது. தொடர் மழையால் நீர்வரத்து அதிகரித்து கும்பக்கரை அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது.
கொடைக்கானல் மலை மற்றும் கும்பக்கரை அருவி நீா்ப்பிடிப்புப் பகுதிகளில் பெய்து வரும் தொடர் கனமழை காரணமாக கும்பக்கரை அருவியில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது. இந்நிலையில் அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது.
இதனால், தொடா்ந்து 6வது நாளாக இன்றும் சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க வனத் துறையினா் தடை விதித்துள்ளனர். மேலும் அருவிகளில் வரத்து சீரான பின்னரே சுற்றுலாப் பயணிகள் அருவியில் குளிக்க அனுமதிக்கப்படுவா் என வனத் துறையினா் தெரிவித்தனா்.
கம்பம் அருகே மேற்கு தொடர்ச்சி மலையில் உள்ள சுருளி அருவியில் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. சுருளி அருளியில் நீர்வரத்து அதிகரித்து வெள்ளப்பெருக்கு ஏற்பட்டதால் குளிக்க தடை விதிக்கப்பட்டிருந்தது. சுருளி அருவியில் நீர்வரத்து சீரானதால் சுற்றுலா பயணிகள் குளிக்கவும் பக்தர்கள் புனித நீராடவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.