தஞ்சை : கும்பகோணம் அரசினர் கலை அறிவியல் கல்லூரியில் மாணவர்களின் தொடர் போராட்டம் காரணமாக, மறு உத்தரவு வரும் வரை காலவரையின்றி கல்லூரி மூடப்படுகிறது என அறிவிக்கப்பட்டுள்ளது. இக்கல்லூரியில் எம்.ஏ தமிழ் 2ம் ஆண்டு படிக்கும் மாணவரை ஆசிரியர் ஒருவர் ஜாதி ரீதியாக பேசியதாகக் கூறி, கடந்த 6 நாட்களாக வகுப்பை புறக்கணித்து போராடி வருகின்றனர்.