அயோத்தி: பிரமாண்டமாக கட்டப்பட்டுள்ள அயோத்தி ராமர் கோயிலின் கும்பாபிஷேகம் கடந்த ஆண்டு ஜனவரி 22ம் தேதி நடந்தது. பிரதமர் மோடி தலைமையில் நடந்த கும்பாபிஷேகத்தில் ஏராளமானோர் கலந்து கொண்டனர். இந்த நிலையில் அயோத்தி கோயிலின் 2ம் கட்ட கும்பாபிஷேகம் நேற்று நடந்தது. இதில் ஸ்ரீ ராம் தர்பார், சிவன், கணேசர், அனுமார் உட்பட 8 கோயில்களில் கும்பாபிஷேகம் நடந்தது. கங்கா தசரா பண்டிகையை ஒட்டி நடந்த கும்பாபிஷேக விழாவில் உபி முதல்வர் யோகி ஆதித்யநாத் கலந்து கொண்டார்.
அயோத்தி ராசிக் நிவாஸ் கோயிலின் தலைமை பூசாரி மகாந்த் ரகுவர் ஷரண் கூறுகையில்,‘‘இந்த ஆண்டு கங்கை தசரா புனிதமானது மட்டுமல்ல, வரலாற்று சிறப்புமிக்கது. 500 ஆண்டுகால நீண்ட போராட்டத்திற்குப் பிறகு, ‘ராஜாராமர்’ என்று அழைக்கப்படும் ராமர், அயோத்தி ராமர் கோயிலின் முதல் தளத்தில் நிறுவப்பட்டுள்ளார்’’ என்றார்.