சென்னை: ஈஷா காவேரி கூக்குரல் இயக்கம் சார்பில் மகத்தான வருமானம் தரும் மாற்று விவசாயம் எனும் தலைப்பில் கருத்தரங்கம் கன்னியாகுமரியில் வரும் 22ம் தேதி நடைபெற உள்ளது. இதுதொடர்பாக சென்னை பத்திரிகையாளர் மன்றத்தில், அந்த இயக்கத்தின் சார்பில் நிருபர்களை சந்தித்தனர். அப்போது காவேரி கூக்குரல் இயக்கத்தின் கள ஒருங்கிணைப்பாளர் தமிழ்மாறன் பேசியதாவது: அழிந்து வரும் காவேரி நதிக்கு புத்துயிரூட்டும் நோக்கத்தில் சத்குருவால் இந்த இயக்கம் தொடங்கப்பட்டது. இதன் மூலம் காவேரி வடிநிலப் பகுதிகளில் 242 கோடி மரங்கள் நட திட்டமிட்டு அதனை செயல்படுத்தும் வகையில் இயங்கி வருகிறது. தமிழகத்தில் மிளகு சாத்தியமானதைப் போல் ஜாதிக்காய், அவகோடா சாகுபடியும் சாத்தியமாகி வருகிறது. பல மாவட்ட விவசாயிகள் அறுவடையை தொடங்கி விட்டனர். இப்படி தென்னை, பாக்கு மற்றும் பிற பயிர் சாகுபடியின் இடையே ஊடுபயிராக என்னென்னன பயிரிடலாம் என்பதை தெளிவுபடுத்தி விவசாயிகளின் பொருளாதார முன்னேற்றத்துக்கு வழிவகுக்கப்படுகிறது. எனவே விவசாயிகள் இதில் கலந்து கொள்ள வேண்டும். இவ்வாறு அவர் கூறினார்.
குமரியில் சிறப்பு கருத்தரங்கு
0