கன்னியாகுமரி: கன்னியாகுமரியில் கனமழை காரணமாக காளிகேசம், கீரிப்பாறை பகுதிகளில் காட்டாற்று வெள்ளம் ஏற்பட்டுள்ளது. கரையோர மக்கள் பாதுகாப்பாக இருக்க மாவட்ட நிர்வாகம் அறிவுறுத்தியது. காளிகேசம் சுற்றுலா பகுதிகளுக்கு மக்கள் செல்ல வேண்டாம் எனவும் வனத்துறை வேண்டுகோள் விடுத்துள்ளனர்.