குமரி: குமரி மாவட்டம் குலசேகரம் மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கைதான பரமசிவத்தை ஒருநாள் காவலில் விசாரிக்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 5 நாட்கள் காவலில் வைத்து விசாரிக்க நாகர்கோவில் முதன்மை அமர்வு நீதிமன்றத்தில் சிபிசிஐடி மனுத்தாக்கல் செய்தது. சிபிசிஐடி மனுவை விசாரித்த நீதிபதி விஜயலட்சுமி ஒருநாள் காவலில் எடுக்க அனுமதி வழங்கி உத்தரவிட்டுள்ளது. மருத்துவ மாணவி தற்கொலை வழக்கில் கல்லூரி துறைத்தலைவர் பரமசிவம் கைது செய்யப்பட்டிருந்தார்.