லக்னோ: தனது மாயாஜால சுழற்பந்து வீச்சால் இந்திய கிரிக்கெட் ரசிகர்களை கவர்ந்துள்ள குல்தீப் யாதவ் தனது சிறுவயது தோழியான வன்ஷிகாவை திருமணம் செய்ய உள்ளார். நேற்று முன்தினம் லக்னோவில் உள்ள ஒரு ஓட்டலில் இருவருக்கும் எளிமையான முறையில் நிச்சயதார்த்தம் நடைபெற்றது. இந்த நிகழ்வில் அவரது நெருங்கிய உறவினர்கள் மற்றும் ரிங்கு சிங் உள்ளிட்ட சில கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொண்டனர். இங்கிலாந்து டெஸ்ட் தொடருக்கு பின்பு இவர்களது திருமணம் நடைபெறும் என தெரிகிறது.
குல்தீப்யாதவ் தோழியை மணக்கிறார்
0