திருநெல்வேலி: கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கு வந்த இழுவை கப்பல் தரை தட்டி நிற்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. தரை தட்டி நிற்கும் இழுவைக் கப்பலில் இருப்பது என்ன என்பது தெரியாததால் கூடங்குளம் பகுதி மக்கள் அச்சமடைந்துள்ளனர். இழுவைக் கப்பலில் சுற்றுச்சூழலுக்கு ஆபத்தான பொருட்கள் உள்ளதா என்பதை அணுமின் நிலைய அதிகாரிகள் தெளிவுபடுத்த கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.