கேடிஎம் நிறுவனம் மேம்படுத்தப்பட்ட ஆர்சி 200 மோட்டார் சைக்கிளை அறிமுகம் செய்துள்ளது. இதில் 199.5 சிசி சிங்கிள் சிலிண்டர், லிக்விட் கூல்டு இன்ஜின் இடம் பெற்றுள்ளது. இது அதிகபட்சமாக 25 எச்பி பவரையும், 19.2 என்எம் டார்க்கையும் வெளிப்படுத்தும். 6 ஸ்பீடு கியர் பாக்ஸ் உள்ளது. இந்த மோட்டசர் சைக்கிளில் தற்போது புதிதாக டிஎப்டி டிஸ்பிளே இடம் பெற்றுள்ளது.
டியூக் 390 மற்றும் 250 மோட்டார் சைக்கிள்களில் உள்ள டிஎப்டி டிஸ்பிளே தான் இதிலும் இடம் பெற்றுள்ளது. புதிய அம்சங்கள் காரணமாக பைக்கின் விலை ரூ.12,000 உயர்த்தப்பட்டு, ஷோரூம் விலை சுமார் ரூ.2.54 லட்சம் என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. கேடிஎம் ஆர்சி 200 மோட்டார் சைக்கிளின் விலை கடந்த மார்ச் மாதத்தில் ரூ.33,000 உயர்த்தப்பட்டது குறிப்பிடத்தக்கது.