திருவண்ணாமலை: விழுப்புரம் இஎம்ஆர் கார்டன் பகுதியைச் சேர்ந்தவர் வடிவேல் மகன் மோகன்(45). சென்னை பொருளாதார குற்றப்பிரிவு (தலைமையிடம்) தலைமை காவலராக (ஏட்டு ) பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ஜெயந்தி, விழுப்புரம் மாவட்ட திட்டமிட்ட குற்ற நுண்ணறிவு பிரிவில் (ஒசிஐயு) ஏட்டாக பணிபுரிகிறார். இந்நிலையில், வாழப்பட்டு கிராமத்தைச் சேர்ந்த தனது நண்பரான சக்திவேல் என்பவருடன் போலீஸ் ஏட்டு மோகன் நேற்று திருவண்ணாமலையில் கிரிவலம் சென்றார். கிரிவலப் பாதையில் வருண லிங்கம் அருகே நடந்து சென்று கொண்டிருந்தபோது, திடீரென மோகனுக்கு மயக்கம் ஏற்பட்டு, சரிந்து விழுந்தார். உடனடியாக, அவரை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் திருவண்ணாமலை மருத்துவமனைக்கு சிகிச்சைக்காக அழைத்துச் சென்றனர்.அங்கு, அவரை பரிசோதித்த டாக்டர்கள் வரும் வழியிலேயே மோகன் இறந்து விட்டதாக கூறினர்.
கிரிவலம் சென்ற சென்னை ஏட்டு மயங்கி விழுந்து பலி
133
previous post