கர்நாடகா: கிருஷ்ணராஜ சாகர் அணையில் இருந்து காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு 10வது நாளாக நிறுத்தப்பட்டுள்ளது. காவிரி ஆற்றில் தண்ணீர் திறப்பு நிறுத்தப்பட்ட நிலையில் கால்வாயில் 567 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது. கபினி அணையில் இருந்து தொடர்ந்து 500 கனஅடி தண்ணீர் மட்டுமே காவிரி ஆற்றில் திறக்கப்பட்டு வருகிறது.