கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் மேலும் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளனர். காவேரிப்பட்டினத்தைச் சேர்ந்த ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜை கைது செய்து போலீசார் நடவடிக்கை மேற்கொண்டுள்ளனர். முக்கிய குற்றவாளியான சிவராமனுக்கு உடந்தையாக இருந்ததாக ஜிம் மாஸ்டர் டேனியல் அருள்ராஜ் கைது செய்யப்பட்டுள்ளார். கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை வழக்கில் இதுவரை 17 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்