கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரியில் பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை முதன்மை செயலாளருக்கு முதற்கட்ட அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டது. கைதாகி உள்ள நபர்கள் வேறு மாவட்டங்களில் இது போன்று போலியாக முகாம்களை நடத்தி இருக்கிறார்களா என்பது குறித்து விசாரணை நடத்தி வருவதாகவும் மாணவிகளுக்கு பாதிப்புகள் ஏற்பட்டதா என்பது குறித்து விசாரணை நடைபெறுவதாகவும் கல்வித்துறை தகவல் தெரிவித்துள்ளது.