சென்னை : கிருஷ்ணகிரியில் மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த வழக்கில் விசாரணை அறிக்கையை தாக்கல் செய்ய ஆணையிடப்பட்டுள்ளது. கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வழக்கை சிபிஐ-க்கு மாற்றக்கோரி உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. தனியார் பள்ளியில் போலி என்.சி.சி. முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்தது தொடர்பாக வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வழக்கில், பள்ளிக்கல்வித்துறை அனுமதியின்றி எப்படி முகாம் நடத்த முடியும் என்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கேள்வி எழுப்பி உள்ளனர்.