கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் ஊத்தங்கரை காவல் நிலைய வளாகத்தில் இருந்த பள்ளி பேருந்தை எரித்ததாக இருவர் கைது செய்யப்பட்டனர். பள்ளி பேருந்தை எரித்ததாக மணிவண்ணன், சூர்யா ஆகியோர் கைது செய்யப்பட்டு அவர்களிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். பைக் மீது பள்ளி வாகனம் மோதிய விபத்தில் சதாம் உசேன் என்பவர் உயிரிழந்த நிலையில் பள்ளி வாகனம் பறிமுதல் செய்யப்பட்டிருந்தது.