சென்னை: கிருஷ்ணகிரியில் பட்டாசு குடோன் வெடித்த விபத்தில் மாநில மனித உரிமைகள் ஆணையம் தாமாக முன்வந்து வழக்கு பதிவு செய்துள்ளது. மாவட்ட ஆட்சியர், எஸ்.பி. ஆறு வாரங்களில் அறிக்கை தாக்கல் செய்ய மனித உரிமைகள் ஆணையம் உத்தரவிட்டுள்ளது. வெடி விபத்தில் 9 பேர் உயிரிழந்த நிலையில் வழக்கை தாமாக முன்வந்து ஆணையம் விசாரணைக்கு எடுத்தது.