கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் உள்ள குளிர்பான தயாரிப்பு ஆலையில் மத்திய, மாநில உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர். திருவண்ணாமலையில் குளிர்பானம் குடித்து 5 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் தொடர்பாக அதிரடி ஆய்வு மேற்கொள்ளப்பட்டு வருகிறது. கடந்த 3 ஆண்டுகளுக்கு முன், சென்னையில் இதே நிறுவனம் தயாரித்த குளிர்பானம் குடித்து 2 குழந்தைகள் உடல்நலம் பாதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.