சென்னை : கிருஷ்ணகிரி தனியார் பள்ளியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளை பாலியல் தொல்லை செய்த விவகாரம் தொடர்பாக புலன் விசாரணை அறிக்கையை செப்.4-ல் தாக்கல் செய்ய அரசுக்கு ஐகோர்ட் பொறுப்பு தலைமை நீதிபதி அமர்வு உத்தரவு பிறப்பித்துள்ளது. சிவராமன் மற்றும் அவரது தந்தையின் பிரேத பரிசோதனை அறிக்கைகளையும் தாக்கல் செய்ய அரசுக்கு ஆணையிடப்பட்டுள்ளது. பள்ளிக்கு எதிரான விசாரணை அறிக்கை அடிப்படையில் நடவடிக்கை எடுக்க பள்ளிக் கல்வித்துறைக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. மாவட்ட சட்டப் பணிகள் ஆணைக்குழு பள்ளியை ஆய்வு செய்து மாணவிகள், பெற்றோரை விசாரித்து அறிக்கை தர ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்துள்ளது.