சென்னை: கிருஷ்ணகிரியில் மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட விவகாரத்தில் சிறப்பு புலனாய்வு குழு அமைத்து முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். பாலியல் வன்கொடுமையில் தொடர்புடைய அனைவரும் மீது நடவடிக்கை எடுக்க ஐஜி பவானீஸ்வரி தலைமையில் சிறப்பு புலனாய்வு குழு அமைக்கப்பபட்டுள்ளது. மேலும், மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கை 15 நாளில் விசாரித்து முடிக்க முதல்வர் ஆணையிட்டுள்ளார்.