கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக தேசிய மகளிர் ஆணையம் நோட்டீஸ் அளித்துள்ளது. மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டது தொடர்பாக குற்றவாளி மீது உரிய பிரிவுகளில் வழக்கு பதிய உத்தரவிட்டுள்ளது. குறிப்பிட்ட காலத்துக்குள் நேர்மையான விசாரணை நடத்தி குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத் தரவும் அறிவுறுத்தியுள்ளது.