கிருஷ்ணகிரி: பர்கூர் தனியார் பள்ளியில் மாணவியை பாலியல் வன்கொடுமை செய்த விவகாரம் பற்றி கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் விளக்கம் அளித்துள்ளார். மாணவி பாலியல் வன்கொடுமை தொடர்பாக விசாரணை நடைபெற்று வருகிறது. எந்தெந்த பள்ளிகளில் போலி என்.சி.சி. முகாம்கள் நடந்தது என்பது குறித்து விசாரித்து வருகிறோம். பாலியல் தொல்லை புகார் குறித்து மாணவிகள் 1098 என்ற எண்ணில் தொடர்பு கொள்ளலாம் என்றும் மாவட்ட ஆட்சியர் தெரிவித்தார். என்.சி.சி. முகாம் நடந்த அன்று அங்கிருந்த மாணவிகளிடம் விசாரணை நடத்தப்பட்டுள்ளது. என்.சி.சி. முகாம் தொடர்பாக பள்ளி முறையான நடைமுறைகளை பின்பற்றவில்லை என்றும் தெரிவித்தார்.