கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி அருகே பள்ளி மாணவி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட வழக்கில் மேலும் ஒரு தனியார் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ளார். தனியார் பள்ளி முதல்வர் வினோதினியை கைது செய்து சிறப்பு விசாரணை குழு நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. தனியார் பள்ளியில் ஜனவரியில் போலி என்சிசி முகாம் நடத்தி மாணவிகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்த சம்பவத்தில் தனியார் பள்ளி முதல்வர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், இதுவரை 14 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.