கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டம் சூளகிரியில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் 2வது ஆலையில் உற்பத்தி தொடங்கியது. ஜெர்மனியை சேர்ந்த ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனம், அதன் இந்திய வணிகத்தை விரிவுபடுத்தும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. 16,500 சதுரஅடியில் புதிய ஆலை திறக்கப்பட்டுள்ள நிலையில் 1.08 லட்சம் சதுரஅடியில் ஆலை விரிவாக்கப்பட உள்ளது.
ஏற்கெனவே ஒசூரில் ஸ்கேஃப்லர் இந்தியாவின் ஆலை இயங்கி வருகிறது. இந்நிலையில், சூளகிரி ஆலையை சேர்த்து ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனத்துக்கு நாடு முழுவதும் 5 ஆலைகள் உள்ளன. இந்த ஸ்கேஃப்லர் ஆலையில் பெட்ரோல், டீசல், ஹைபிரிட் கார்களுக்கு தேவையான உதிரிபாகங்களை உற்பத்தி செய்து வருகிறது. இந்தியாவில் கடந்த 3 ஆண்டுகளில் மட்டும் ஸ்கேஃப்லர் இந்தியா நிறுவனம் ரூ.1,700 கோடி முதலீடு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.