கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி தனியார் பள்ளி மாணவி வன்கொடுமை தொடர்பாக சிறப்பு புலனாய்வு குழு ஆலோசனை நடத்தி வருகிறது. காவல்துறை தலைவர் பவானீஸ்வரி, சமூக நலத்துறை செயலாளர் ஜெய்ஸ்ரீ முரளிதரன் தலைமையில் கிருஷ்ணகிரியில் ஆலோசனை கூட்டம். மாணவி பாலியல் வன்கொடுமை விவகாரத்தில் இதுவரை எடுக்கப்பட்ட நடவடிக்கை என்ன என்பது குறித்து ஆலோசனை நடைபெறுகிறது.