கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி புதுப்பேட்டை மேற்கு மாட வீதியில் வெங்கடேசன் என்பவரது வீட்டின் பூட்டை உடைத்து வீட்டில் இருந்த ரூ.1.50 லட்சம் மதிப்பிலான 42 கிலோ தலை முடி திருடபட்டது. இது தொடர்பாக காவேரிப்பட்டினம் மிட்டஹள்ளி பகுதியை சேர்ந்த ரஞ்சித் குமார் என்பவரை டவுன் போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.