சென்னை: கிருஷ்ணகிரி பட்டாசு குடோன் விபத்தில் உயிரிழந்தவர்கள் குடும்பத்தினருக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இரங்கல் தெரிவித்துள்ளார். மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மேற்பார்வையிட்டு துரிதப்படுத்த அமைச்சர் சக்கரபாணியை அனுப்பிவைத்துள்ளார். விபத்தில் படுகாயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெறுவோருக்கு சிறப்பு சிகிச்சை வழங்கவும் அறிவுறுத்தியுள்ளார்.