டெல்லி: கிருஷ்ணகிரி பட்டாசு ஆலை விபத்தில் உயிரிழந்த 9 பேரின் குடும்பத்திற்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்துள்ளார். பட்டாசு ஆலை விபத்தில் விலைமதிப்பற்ற உயிர்கள் பலியாகியிருப்பது ஆழ்ந்த வருத்தத்தை அளிக்கிறது. உயிரிழந்தோரின் குடும்பத்தினருக்கு தலா ரூ.2 லட்சம், காயமடைந்தோருக்கு தலா ரூ.50,000 வழங்கப்படும் என்று பிரதமர் தெரிவித்தார்.