கிருஷ்ணகிரி: கிருஷ்ணகிரி மாவட்டத்தில் சிசிடிவி பொருத்தினால்தான் விநாயகர் சிலை வைக்க அனுமதிக்கப்படும் என்று மாவட்ட ஆட்சியர் சரயு தெரிவித்துள்ளார். நடப்பாண்டு விநாயகர் சிலை வைக்க 5 நாட்கள் மட்டுமே அனுமதி. கிருஷ்ணகிரி மாவட்ட நிர்வாகம் அனுமதி தந்த நீர்நிலைகளில் மட்டுமே சிலைகளை கரைக்க வேண்டும். விநாயகர் சிலை வைப்பது தொடர்பாக இந்து அமைப்புகள், பொதுமக்களுடன் ஆட்சியர், போலீசார் ஆலோசனை நடத்தியதில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
கிருஷ்ணகிரியில் சிசிடிவி பொருத்தினால்தான் விநாயகர் சிலை அனுமதி: மாவட்ட ஆட்சியர்
previous post