கிருஷ்ணகிரி, ஆக.18: கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறன் பிறந்த நாளையொட்டி, அவரது படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. கிருஷ்ணகிரி கிழக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில், முன்னாள் ஒன்றிய அமைச்சர் முரசொலி மாறனின் 92வது பிறந்த நாளையொட்டி, அவரது உருவப்படத்திற்கு மாலை அணிவித்து, மலர் தூவி மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று நடந்தது. நிகழ்ச்சிக்கு மேற்கு நகர செயலாளர் அஸ்லாம், கிழக்கு நகர செயலாளர் வேலுமணி ஆகியோர் தலைமையில் மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.
இந்நிகழ்ச்சியில், மாவட்ட துணை செயலாளர்கள் கோவிந்தசாமி, சாவித்திரி கடலரசுமூர்த்தி, நகர்மன்ற உறுப்பினர்கள் சுனில்குமார், மீன் ஜெயக்குமார், மதன்ராஜ், புவனேஸ்வரி, தேன்மொழி, மாவட்ட பிரதிநிதி சுகுமார், மாவட்ட ஐடி விங் அமைப்பாளர் விஜய்ராஜசேகர், முன்னாள் நகர்மன்ற உறுப்பினர் சரவணன், நிர்வாகிகள் சந்தோஷ், பரந்தாமன், வெங்கட்ராமன், முகமதுஜான், ரியாஸ், புஷ்பா, திருமலைச்செல்வன், லட்சுமிகாந்தன், ஆசிப், திருப்பதி உள்ளிட்ட பலர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.


