இந்துக்களின் முக்கிய பண்டிகையான கிருஷ்ண ஜெயந்தி விழா இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. இந்துக்களின் காக்கும் கடவுளாக கருதப்படும் மகா விஷ்ணுவின் அவதாரங்களில் 9-வது அவதாரமான கிருஷ்ணர் பிறந்த அவதாரம் சிறப்புக்குரியது. தாய்மை, அன்பு, பாசம், காதல் உணர்வுகளை தாங்கி, அன்பு ஒன்றே நிலையானது என்பதை வையகத்துக்கு உணர்த்தும் அவதாரமாகும். கிருஷ்ணரை தங்கள் வீட்டு குழந்தையாக பாவித்து மக்கள் அனைவரும் ஒருமித்து தங்கள் இல்லங்களில் கொண்டாடும் அற்புதமான நிகழ்வு. அத்தகைய சிறப்புக்குரிய கிருஷ்ண ஜெயந்தி விழா நாடு முழுவதும் இன்று கோலாகலமாக கொண்டாடப்படுகிறது.