கோழிக்கோடு: கேரளா மாநிலம் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பலில் தீவிபத்து ஏற்பட்டுள்ளது. கொழும்புவில் இருந்து மும்பைக்கு சென்ற கப்பல் கேரளாவின் கோழிக்கோடு அருகே நடுக்கடலில் தீப்பிடித்தது. தீப்பிடித்த உடனே கப்பலில் இருந்த 18 ஊழியர்கள் கடலில் குதித்து தப்பினர். கடலில் குதித்த 18 ஊழியர்களை மீட்க ஐஎன்எஸ் சூரத் என்ற கப்பல் விரைந்துள்ளது. தீப்பிடித்த சரக்கு கப்பலில் இருந்து 20 கண்டெய்னர்கள் கடலில் விழுந்தன.
கோழிக்கோடு அருகே நடுக்கடலில் சிங்கப்பூரைச் சேர்ந்த சரக்கு கப்பலில் தீவிபத்து!!
0