சென்னை: ஆடிமாதம் அம்மன் கோயில் திருவிழாக்கள் தொடர்ந்து நடைபெற்று வருவதால் அனைத்து பூக்களின் விலையும் உயர்ந்துள்ளது. கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ அளவில் மல்லிரூ.500, ஜாதி மல்லி, முல்லைரூ.400, கனகாம்பரம்ரூ.800, அரளிப்பூரூ.250, சாமந்திரூ.150, சம்பங்கிரூ.200, பன்னீர் ரோஸ், சாக்லேட் ரோஸ் ஆகியவைரூ.120 என விலை உயர்ந்து விற்பனையானது. பூக்களின் தேவை அதிகரித்து காணப்பட்ட நிலையில், ஏராளமானோர் விலை உயர்வை பொருட்படுத்தாமல் பூக்களை வாங்கிச் சென்றனர். இந்நிலையில், ஆடிப் பெருக்கு நாளான நேற்று பூக்களின் விலை மேலும் அதிகரித்தது. ஒரு கிலோ மல்லிரூ.700, ஐஸ் மல்லிரூ.600, முல்லை மற்றும் ஜாதி மல்லிரூ.500, சாமந்திரூ.170, சம்பங்கிரூ.220, அரளிப்பூரூ.200, பன்னீர் ரோஸ் மற்றும் சாக்லேட் ரோஸ் ஆகியவைரூ.140 என விலை உயர்ந்து விற்பனை செய்யப்பட்டது. இதில், அதிகபட்சமாக கனகாம்பரம்ரூ.1000க்கு விற்கப்பட்டது.