சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டில் வெங்காயம் தவிர அனைத்து காய்கறிகளின் விலை கடுமையாக சரிந்துள்ளது. நேற்று காலை கோயம்பேடு மார்க்கெட்டுக்கு 700 வாகனங்களில் 7,000 டன் காய்கறிகள் வந்து குவிந்துள்ளன. ஆனால், தொடர்ந்து மழை பெய்து வருவதாலும், காய்கறிகளை வாங்க கோயம்பேடு மார்க்கெட்டுக்கு சென்னை புறநகர் வியாபாரிகள், பொதுமக்கள் வருகை குறைந்ததாலும் வியாபாரம் குறைந்து சுமார் 2,000 டன் காய்கறிகள் தேக்கம் அடைந்தன.
ஒரு கிலோ பெரிய வெங்காயம் ரூ. 70, சின்ன வெங்காயம் ரூ. 120, தக்காளி ரூ. 25, கேரட் ரூ. 15, பீன்ஸ் ரூ. 35, பீட்ரூட், சவ்சவ், ரூ. 20, முள்ளங்கி ரூ. 30, முட்டைகோஸ் ரூ. 10, வெண்டைக்காய் ரூ. 20, கத்தரிக்காய் ரூ. 15, காராமணி, பாவக்காய் ரூ. 30, புடலங்காய், சுரக்காய் ரூ. 15, சேனைக்கிழங்கு ரூ. 50, முருங்கைக்காய் ரூ. 90, காலிபிளவர் ரூ. 20, பட்டாணி ரூ. 70, அவரைக்காய் ரூ. 45, பீர்க்கங்காய், நூக்கல் ரூ. 35, கோவைக்காய் ரூ. 15, கொத்தவரங்காய் ரூ. 25க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. பெரிய வெங்காயம் மற்றும் சின்ன வெங்காயத்தின் விலை மட்டும் குறையவில்லை.