அண்ணாநகர்: கோயம்பேட்டில் காய்கறி, பூ, பழம் மற்றும் உணவு தானிய மார்க்கெட்டுகள் தனி தனியாக இயங்கி வருகிறது. இந்த மார்க்கெட் வளாகத்தில் டிராவல்ஸ் கார்கள் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டிருப்பதாக புகார்கள் எழுந்தது. இதையடுத்து அங்காடி நிர்வாக முதன்மை அலுவலர் இந்துமதி, நேற்று முன்தினம் இரவு திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
அப்போது அவர், பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கார்களை உடனடியாக அங்காடி நிர்வாக அலுவலத்தில் ஒப்படைக்கவும். உரிமையாளர்கள் வந்தால் அபராதம் விதித்து எச்சரிக்கை விடுவிக்கும்படியும் தெரிவித்தார். இதையடுத்து 20க்கும் மேற்பட்ட கார்களை அப்புறப்படுத்தினர்.
அதேபோல் மார்க்கெட் வளாகத்தில் பல மாதங்களாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள பைக், ஆட்டோக்களையும் அப்புறப்படுத்த உத்தரவிட்டார். அதன்படி அங்காடி நிர்வாக குழு, அத்தகைய வாகனங்களை அப்புறப்படுத்தும் பணியில் 2வது நாளாக தீவிரப்படுத்தி வருகின்றனர்.