சென்னை: கோயம்பேடு மார்க்கெட்டுக்கு நேற்று காலை 650 வாகனங்களில் 7 ஆயிரம் டன் காய்கறிகளே வந்ததால் அனைத்து காய்கறிகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்தது. ஒரு கிலோ வெங்காயம் ரூ.18ல் இருந்து ரூ.25க்கும், சின்ன வெங்காயம் ரூ.40ல் இருந்து ரூ.60க்கும், தக்காளி ரூ.15க்கும், உருளைகிழங்கு ரூ.30ல் இருந்து ரூ.45க்கும், கேரட் ரூ.25ல் இருந்து ரூ.40க்கும், பீன்ஸ் ரூ.100ல் இருந்து ரூ.150க்கும், அவரைக்காய் ரூ.50ல் இருந்து ரூ.100க்கும், முருங்கைக்காய் ரூ.50ல் இருந்து ரூ.90க்கும் விற்கப்பட்டது. இதேபோல் பீட்ரூட், சவ்சவ், முள்ளங்கி, முட்டைகோஸ், வெண்டைக்காய், காராமணி, சேனைகிழங்கு, காலிபிளவர் வெள்ளரிக்காய் விலையும் அதிகரித்திருந்தது.
கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறிகள் விலை அதிகரிப்பு
0