சென்னை: கோயம்பேட்டில், வரத்து குறைவு காரணமாக, தக்காளி விலை மட்டுமல்லாது இஞ்சி விலையும் உயர்ந்துள்ளது. நேற்று முன்தினம் ஒரு கிலோ தக்காளி ரூ.80க்கு விற்பனை செய்யப்பட்டது. நேற்று காலை மீண்டும் விலை உயர்ந்து ஒரு கிலோ தக்காளி ரூ.120க்கு விற்பனை செய்யப்பட்டது. இதுபோல் சின்ன வெங்காயம் ரூ.150க்கும் இஞ்சி ரூ.260க்கும் பூண்டு , பட்டாணி ரூ. 180க்கும், வண்ண குடமிளகாய் ரூ.190க்கு உருளை கிழங்கு, ரூ.35க்கும், பீன்ஸ் ரூ.80க்கும், பீட்ரூட் ரூ.40க்கும், சவ்சவ் ரூ.23க்கும், முள்ளங்கி ரூ.35க்கும், முட்டை கோஸ் ரூ.20க்கும், கத்திரிக்காய் ரூ.40க்கும், காராமணி ரூ.60க்கும், பாவற்காய் ரூ.55க்கும், புடலங்காய் ,
சுரைக்காய் ரூ.30க்கும் சேனைக்கிழங்கு ரூ.46 க்கும் முருங்கைக்காய் ரூ.50க்கும், சேமை கிழங்கு ரூ.40க்கும் காலிபிளவர் ரூ.35க்கும் வெள்ளரிக்காய் ரூ.30க்கும், அவரைக்காய் ரூ.50க்கும், பீர்க்கங்காய் ரூ.40க்கும், எலுமிச்சை பழம் ரூ.35க்கும் கோவைக்காய், கொத்தவரங்காய் ரூ.30க்கும் விற்பனை செய்யப்பட்டது. இதுகுறித்து ,கோயம்பேடு மார்க்கெட் சிறு மொத்த வியாபாரிகளின் தலைவர் எஸ்எஸ்.முத்துகுமார் கூறும்போது, ‘‘இந்த மாதம் முழுவதும் அனைத்து காய்கறிகளின் விலை ஏற்றம், இறக்கமாகத்தான் இருக்கும். அடுத்த மாதம் அனைத்து காய்கறிகளின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.’’ என்றார்.