Dinakaran Cinema Button CINEMA Astrology Button ASTROLOGY  Magazines Logo VIDEOS Sun network Logo Epaper LogoEpaper Facebook
search-icon-img
Advertisement

கோயம்பேடு மார்க்கெட்டில் பூக்களின் விலை சரிவு

அண்ணாநகர்: கோயம்பேடு பூ மார்க்கெட்டில் நேற்று முன்தினம் ஒரு கிலோ மல்லி ரூ.800க்கும், ஐஸ் மல்லி ரூ.700க்கும், கனகாம்பரம் ரூ.800 க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.500க்கும், சாமந்தி ரூ.50க்கும், சம்பங்கி ரூ.220க்கும், அரளி பூ ரூ.100க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.140க்கும், பன்னீர் ரோஸ் ரூ.50க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், முகூர்த்த நாட்கள் மற்றும் விசேஷ நாட்கள் முடிந்ததால் மார்க்கெட்டில் நேற்று காலை அனைத்து பூக்களின் விலை குறைந்துள்ளது. அதன் விவரம் பின்வருமாறு, ஒரு கிலோ மல்லி ரூ.600க்கும், ஐஸ் மல்லி ரூ.500க்கும், கனகாம்பரம் ரூ.700க்கும், முல்லை மற்றும் ஜாதிமல்லி ரூ.400க்கும், சாமந்தி ரூ.100க்கும், சம்பங்கி ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.60க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.120 க்கும், அரளி பூ ரூ.90க்கும் விற்பனை செய்யப்பட்டது.