சென்னை: விசேஷ நாட்கள் மற்றும் முகூர்த்த நாட்கள் இல்லாததால் கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலை குறைந்தது. இதில் ஒரு கிலோ மல்லி ரூ.1,200 லிருந்து ரூ.1,800க்கும், ஐஸ் மல்லி ரூ.1000 லிருந்து ரூ.1,500க்கும், ஜாதி மல்லி மற்றும் முல்லை ரூ.600 லிருந்து ரூ.750க்கும், கனகாம்பரம் ரூ.1,500 லிருந்து ரூ.1000க்கும், அரளி பூ ரூ.250லிருந்து ரூ.100க்கும், சாமந்தி ரூ.140லிருந்து ரூ.80க்கும், சம்பங்கி ரூ.160லிருந்து ரூ.100க்கும், பன்னீர் ரோஸ் ரூ.120லிருந்து ரூ.70க்கும், சாக்லேட் ரோஸ் ரூ.150 லிருந்து ரூ.120 க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும், இன்று முதல் மீண்டும் பூக்களின் விலை படிப்படியாக குறைய வாய்ப்புள்ளது.
கோயம்பேடு மார்க்கெட்டில் அனைத்து பூக்களின் விலையும் சரிந்தது
0
previous post